Let’s talk let’s connect | LTLC0138 | July 15, 2020 | Ponniyin Selvan | Gomathi

An Amazing Human Being
2 min readSep 12, 2020

கதை அறிவோம் — பொன்னியின் செல்வன்

பகிர்வோம் அறிவோம் ( Lets talk Lets connect ) அமர்வு, தொகுப்பாளர் காயத்ரியின் அன்பான சுருக்கமான வரவேற்புடன் துவங்கியது.

பொன்னியின் செல்வன் நாவல் பற்றி தனது கருத்துக்களையும், படித்து உணர்ந்த அனுபவங்களையும் நயங்களுடன் பகிர்ந்து கொண்டார் கோமதி.

காவிய வளமும் இயற்கை செழிப்பும்:

இன்றிலிருந்து 900 ஆண்டுகளுக்கு முன்னர், இயற்கை வளம் மிகுந்த தமிழகத்தின் வீராணம் ஏரிக்கரையில் ஆடி பெருக்கன்று கதாநாயகன் வல்லவராயன் வந்தியத்தேவனின் முதல் தூதுரை பயணத்துடன் ஆரம்பமாகின்றது அமரர் கல்கியின் அழியா காவியம். ஆசிரியரின் வர்ணனைகள் வரலாற்று சம்பவங்களை இயக்கப்படங்களாக நம் கண் முன் நிறுத்துகின்றன.

இளவரசர் கரிகாலரின் நம்பத்தகுந்த நண்பர் வந்தியத்தேவன். நண்பர் தன் தங்கை குந்தவை தேவிக்கு எழுதிய ஓலையுடன் சோழ தலைநகரம் தஞ்சை நோக்கி எல்லையில்லா ஆனந்தத்துடனும் உற்சாகத்துடனும் பயன்படுகிறான் வல்லவராயன்.

முதல் தூதுரைப் பயணம் :

வழியில் ஆழ்வார்கடியானுடன் அறிமுகமாகிறான். பின் உற்ற நண்பன், கடம்பூர் இளவரசன், அரசர் சம்புவரையரின் அன்புக்குரிய மகன் கந்தமாறனின் நட்புறவால் கடம்பூரில் இரவைக் கழிக்கிறான். அங்கு நடுநிசிக் கூட்டம் நடைபெறுகிறது. நடுநிசி என்பதால் சதி கூட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. சோழ சாம்ராஜியம் எதிர்நோக்கவிருக்கும் பேரழிவை முன்னறிந்தவனாய், சக்கரவர்த்தி சுந்தர சோழரிடம் எச்சரிக்கை விடுக்க அதிவேகமாக புறப்படுகிறான் தலைநகரம் காண. பின் சாதப்பிள்ளை சேந்தன் அமுதனுடன் நட்புக் கொண்டு அரண்மனையினுள் நுழைகிறான். தன் சாதுர்யத்தால் பழுவேட்டரையர்களிடம் இருந்து விடுபெற்று, ஒரு வழியாக குந்தவையிடம் ஓலையை சமர்ப்பித்துவிட்டு சக்கரவர்த்தியிடமும் வரவிருக்கும் ஆபத்தை குறித்து விவரித்து விட்டான் வல்லத்து இளவரசன்.

முடிவில்லா காவியம் :

நிறைவுற்றது முதல் தூதுரைப் பயணம். தொடர்கிறது காவியம் எதிர்பாராத திருப்பங்களுடன், சோழ அரியணையின் மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கம் வரை.

வந்தியத்தேவனின் சாமர்த்தியம்

குந்தவை தேவியின் அறிவு முதிர்ச்சி

கரிகாலனின் தலைமை

அருள்மொழிவர்மரின் தாழ்மை

சுந்தர சோழரின் புகழ்

அமுதன்- பூங்குழலியின் பிணைப்பு

ஊமைராணியின் கலங்கமில்லா அன்பு

முதன்மந்திரி அந்நிருத்தரின் ஞானம்

பழுவேட்டரையர் மற்றும் குறுநில மன்னர்களின் விசுவாசம்

ஆழ்வார்கடியானின் கெட்டிக்காரத்தனம்

நந்தினியின் மோகம்

வானதியின் குற்றமற்ற பாவனைகள்

மணிமேகலையின் வெகுளித்தனம்

இன்னும் எண்ணிலடங்காத பாத்திரங்களின் சுவைக்கத்தக்க படைப்புகள், சொல்லி முடியாத வர்ணனைகள், வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எத்தனை முறை படித்தாலும் சலிக்காதவாறு 900 ஆண்டுகளுக்கு முந்தைய அரசாட்சிக்கே அழைத்துச் செல்கிறது நிகழ்நிலை மனிதர்களாக.

விளையாட்டாய் வரலாற்றை கேட்க தொடங்கி பின் வரலாற்றின் உள்ளேயே கூட்டிச்சென்று கதாபாத்திரமாய் நம்மை வலம் வரச் செய்தார் கோமதி. அவரது பங்களிப்பிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் முடிவடைந்தது அமர்வு.

கல்கியின் பொன்னியின் செல்வன் வெறும் வரலாற்றுக் கதை அல்ல, தமிழ்நாட்டின் வளத்திற்கும், தமிழனின் வீரத்திற்கும் சான்றாக நிற்கும் அமரக்காவியம்.

Blogger: Jebha

Watch the session directly on “YouTube”. You can also visit our other 200+ Lets talk lets connect session playlists here.

To Host/Participate a session, Register @ bit.ly/LTLC-Registration

To find all other upcoming sessions, here @ bit.ly/open-sessions

#Amazing Human Being #Let’s Talk Let’s Connect #Ponniyin selvan #Gomathi #Jebha

Thanks for following us in other social medias, Whatsapp|Facebook|Instagram|YouTube|LinkedIn

--

--