Let’s talk let’s connect | LTLC0188 | August 06, 2020 | EIA-Draft 2020 | Radhakrishnan (RK)
“இயற்கையை மீறிய அதிசயம் யாதுமில்லை இவ்வுலகில் , ஆனால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட வரம்பை மீறும்பொழுது அனைத்தும் தகர்க்கப்படுகிறது, பாதுகாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படுகிறது”
இது தொடர்பான சட்டத்தை தான் இன்று காணப்போகிறோம் . தொகுப்பாளர் சாரதா அவர்கள் இன்றைய தலைப்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்eடை(EIA) திரு. தோழன் ஆர்.கே(சமூக ஆர்வலர் ) அவர்கள் விளக்குவதாகவும் மற்றும் பகிர்வோம் அறிவோம் அமர்வில் கற்கவும் கற்பிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் எடுத்து விளக்கினார்.
திரு. ஆர்.கே அவர்கள் ஒரு கேள்வியுடன் தன் உரையை ஆரம்பித்தார் . அதாவது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை ( EIA Notification 2020) பற்றி ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா என்று .பங்கேற்பாளர் ஒருவரின் பதில் “வாட்சப்பில் மிக பரவலாக இதை பற்றிய குறுந்தகவல்கள் அதிகம் வெளியாவதை கண்டு நானும் அதை பகிர்ந்தேன் மெயிலும் செய்தேன் நல்லது என்றெண்ணி. ஆனால் முழுமையாக தெரியாது ஏன்? எதற்கு ? என்றெல்லாம் , அதை பற்றி நீங்கள் எடுத்து கூறினால் நன்றாக இருக்கும் என்றார்” . இதுதான் நிதர்சன உண்மை. இதைப்பற்றிய புரிதல் மக்களிடையே கொண்டு சேர்க்க தான் இன்றைய இந்த சந்திப்பு. அவர் படித்து தெரிந்து கொண்ட சில உண்மை செய்திகளை இங்கே பதிவிட்டார். இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு( EIA) என்பது மத்திய சுற்றுசூழல், காடுகள், பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் வருகின்றது . மக்கள் வாழும் சூழ்நிலையை தக்கவைக்க காடுகளை வளர்ப்பதும் , இயற்கை சூழலை பாதுகாப்பதும் , பருவநிலை மாற்றங்களை தடுப்பதும் இதன் வேலை ஆகும் . நம் இந்தியாவில் காடுகள் 27 சதவீதம் இருந்துருக்க வேண்டும் ஆனால் 17 சதவீதம் மட்டுமே இன்று உள்ளது . இதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான் அமைச்சகத்தின் வேலை . வருடாவருடம் ஒரு இலக்கை கொண்டு அதில் காடுகள் வளர்ப்பதையும்,பருவநிலையில் மாற்றம் நிகழாமல் தடுப்பதையும், தேசிய பேரிடர் போன்ற இயற்கை அழிவுகளையும், செயற்கை பேரிடர்களையும் கூர்ந்து கவனித்து கணிப்பதும் இதன் ஒரு வேலையாகும்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA Notification 2020) 83 பக்கங்கள்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA Notification 2006) 45 பக்கங்கள்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA Notification 1994) 21 பக்கங்கள்
இதெற்கெல்லாம் முன்னோடி “சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் — 1986” . 2000ற்கும் மேற்பட்ட மக்களை பலிவாங்கி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கப்படவைத்த போபால் விஷவாயு கசிவு விபத்தால் ஏற்பட்ட பேரிழப்பே காரணமாகும் . இது உலகையே உலுக்கிய மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாகும் . தொழிற்சாலைகள் மண்ணிற்கும் மக்களிற்கும் சுற்றுசூழலிற்கும் பாதிப்பு அளிக்காதவண்ணம் இருத்தல் வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது தான் இந்த சட்டம் . உலகமயமாக்களால் 1994 ளிலும், சுனாமியால் 2006 யிலும் அடுத்து அடுத்து வெளியாகின .
மார்ச் 12,2020 அன்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இவை வெளியாகி பரபரப்புக்கு உள்ளாகின.
EIA-2020 (முக்கிய பக்கங்கள் : 14, 19, 22, 37–45 , 47 )
தொழிற்சாலைகளை அதன் உற்பத்தியை அடிப்படையாக கொண்டு A,B1,B2 என்று மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். இதில் A கீழ் வரும் தொழிற்சாலைகளை மத்திய அரசாங்கமும் B1 கீழ் வரும் தொழிற்சாலைகளை மாநில அரசாங்கமும் இதில் சிலவற்றை மத்திய அரசாங்கமும் , B2 கீழ் வரும் தொழிற்சாலைகளை மாநில அரசாங்கமும் அங்கீகரிப் பார்கள். A அல்லது B1 கீழ் வரும் தொழிற்சாலைகளின் வாய்ப்புகள், பொதுமக்களைக் கலந்தாலோசித்தல், அதன் சூழலியல் பாதிப்பு என்ற அனுமதி கொடுப்பார்கள்.
B2 வகையறா:
இதன் கீழ் வருவபை பொதுமக்களிற்கு ஆபத்து விளைவிக்காத தொழிற்சாலைகள் ஆகும், பொதுமக்களைக் கலந்தாலோசித்தல் இவற்றிற்கு இடம்பெறாது . இதில் நீர்ப்பாசனம் நவீனமயமாக்கல்,
கிலோரல் ஆல்கலி , சோடா ஆஷ், ஆசிட் உருவாக்கல் , உரம் , பூச்சிக்கொல்லி, பெட்ரோகெமிக்கல், பெயிண்ட் வார்னிஷ், கழிவுகள், ஆயில் மற்றும் காஸ் உள்ளடங்கும்.
இந்த நவீனமயமாக்களில் ஒரு தொழிற்சாலை 50 சதவீதம் மேல் மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்களை கருத்துக்கேட்டல் வேண்டும் , 49 சதவீதம் இருந்தால் கூட கேட்கப்பட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தொழிற்சாலையும் 49 சதவீதம் மேம்படுத்தினால் கண்டிப்பாக மக்கள் வாழ்நிலையை பாதிப்புள்ளாக்கும் .
இது மொத்த பங்கில் 49 சதவீதமா அல்லது கூடுதல் 49 சதவீதமா என்ற தெளிவும் இதிலில்லை. இதில் பூச்சிக்கொல்லி தொழிற்சாலைக்கு கூட பொதுமக்களிடம் கருத்து கேட்பு இல்லை என்ற செய்தி ஆபத்திற்குரியது மற்றும் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களுக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தேவையில்லை என்ற செய்தி வருத்தத்திற்குரியதே .
Blogger: Mahalakshmi
Watch the session directly on “YouTube”. You can also visit our other 200+ Lets talk lets connect session playlists here.
To Host/Participate a session, Register @ bit.ly/LTLC-Registration
To find all other upcoming sessions, here @ bit.ly/open-sessions
#Amazing Human Being #Let’s Talk Let’s Connect #EIA-Draft 2020 #RK #Mahalakshmi
Thanks for following us in other social medias, Whatsapp|Facebook|Instagram|YouTube|LinkedIn