Let’s talk let’s connect | LTLC0226 | August 23, 2020 | Lush Landscaping | Vanitha Subramanian

An Amazing Human Being
4 min readOct 4, 2020

--

Vanitha Subramanian, our speaker curated today’s (23|08|20) session on “Lush landscaping” facilitated by Lets talk Lets connect platform and how it works in spreading love and compassion among human kind.

“Be like a tree,

Stay grounded,

Connect with your roots,

Turn over your new leaves,

Bend before you break,

Enjoy your unique, natural beauty

Keep growing!”

இவை செடிகளுக்கு மட்டும் பொருந்தாது, உயிர் இனமான நாமும் இதில் அடங்குவோம்.

இயற்கை தாயின் முக்கியத்துவம் மற்றும் எதற்காக அதனை பாதுகாக்க வேண்டும்?

“இயற்கை தாய்” என்னும் பெயரில் , “தாய்” என்ற சொல்லில் அனைத்துமே அடங்கும். இன்னும் விரிவாக சொல்வதென்றால், அவள் (இயற்கை தாய்), ஆச்சரியத்தை கூட்டும் வகையில் பல பல உயிர் இனங்களை உருவாக்கி உள்ளாள்.

“அவளால், உருவாக்கிய பல இனங்களில் செடிகள் மற்றும்

மரங்கள் ஒன்றாகும்”. இவை பூக்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பல தருகின்றன. மேலும், நம் சுற்றுச்சூழல் அமைப்பினை பாதுகாத்து வருகின்றது. உயிர் வாழ்வதற்கு தேவையான முக்கிய வாயுவான “உயிர்வளி” (பிராணவாயு) ஆகும் . இந்த வாயுவை உருவாக்குவது செடிகள் மற்றும் மரங்களே ஆகும். இவைகளால், வறட்சியை தடுக்கலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் , இவைகள் உயிர் இறந்தாலும், நமக்கு பல வடிவில் (கரி,சாம்பல் மற்றும் பல) பயன்தரும் ஆற்றல் கொண்டது.

உதாரணத்திற்கு வாழை மரத்தில் இருந்து, வாழைப்பழம், வாழைப்பூ, வாழை இலை,வாழைத்தண்டு மற்றும் பல தருகிறது .

நமக்கு எதற்கு செடிகள் தேவை?

  • நம் நாட்டில், ௬௯௦ (690) விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதில் ௧௯௨ (192) வழக்குகள் தண்ணீர்பற்றாக்குறை காரணமாக உள்ளன.
  • ஒவ்வொரு ஆண்டும், நீர் பற்றாக்குறையினால் ௬௦௦(600) மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
  • ஆய்வறிக்கையின்படி, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ௨௧ ( 21) நகரங்களில் ௨௦௨௧ (2021) க்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும். இது சுமார் ௧௦௦(100) மில்லியன் மக்களை பாதிக்கும்.
  • ௨௦௩௦ (2030) க்குள் இந்தியாவின் ௪௦(40)% மக்களுக்கு குடிநீரைப் பெற முடியாத சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.

இதில் இருந்து தெரிய வருகிறது:

நாம் எவரும் செடிகளை நடுவதில்லை மற்றும் மரங்களை பாதுகாப்பதில் இருந்து தவறிவிட்டோம். செடி, மரங்களை அழித்து , நம் வருங்கால சந்ததியருக்கு வளமான வருங்காலத்தை நாமே அழிக்கின்றோம். இதை சரி செய்ய, நாம் செடிகளை நடவேண்டியதை ஒரு கட்டாயமான விதியாய் உருவாக்க வேன்டும்.

இதனால் , செடி மற்றும் மரங்களை வளர்த்தால் தண்ணீர் பற்றாக்குறையை குறைத்தல், புவி வெப்பமடைதலை பராமரித்தல்

மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.

எப்படி செடிகளை வளர்ப்பதற்கு? அதிக நிலம் கண்டிப்பாக வேண்டுமா?

நிலம் தேவை என்பது உண்மைதான். ஆனால், அதிக நிலம் அவசியமில்லை. மேலும், பயனில்லாத பொருட்களை வைத்து கூட செடிகளை எளிமையாக வளர்க்கலாம்.

உதாரணத்திற்கு, அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக பயனில்லாத தண்ணீர் குடங்கள் மற்றும் வாளிகள் கண்டிப்பாக இருக்கும். அதை, குப்பைததொட்டியில் போடாமல், செடிகள் வளர்ப்பதற்கு உபயோகிக்கலாம். இது போன்ற, இன்னும் பல பயனில்லாத பொருள்களை வைத்து எளிதாக செடிகளை சுலபமாக மகிழ்ச்சியுடன் உங்கள் வீட்டில் வளர்க்கலாம். இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்.

செடியை வளர்ப்பதற்கு தேவையான முக்கியமான விஷயங்கள் என்னவென்று சிறிது சிந்தியுங்கள்!

  • விதைகள்
  • மண் மற்றும்
  • தேங்காய் நார்
  • உரம்
  • பூச்சிக்கொல்லி
  • சூரிய ஒளி மற்றும் தண்ணீர்.

இவையெல்லாம் கட்டாய தேவையாகும்.

விதைகளை எப்படி தேர்வு செய்வது?

  • செடிகளிலிருந்து விதைகளைப் பெற முயற்சியுங்கள்.
  • செடிளை வளர்க்கும் உங்கள் நண்பர்களிடமிருந்து விதைகளைப் பெறலாம்.
  • விதைகளுக்கு புகழ்பெற்ற கடையிலிருந்து வாங்கலாம்.

உதவிக்குறிப்புகள்:

  • முதலில் விதைகளை தொட்டியில் நடுவது அவசியம் இல்லை. ஏனெனில் அனைத்து விதைகளும் தரமானவை அல்ல. ஒரு பிளாஸ்டிக் கப் அல்லது காகித கப்பில் விதைகளை (சிவப்பு மண் அல்லது) தேங்காய் நார் உரத்தோடு நடவேண்டும். இதில் தரமான விதைகள் நன்றாக வளரும். அனால், தரமற்ற விதைகள் வளர்ச்சி இல்லாமல் இருக்கும். இதன் மூலம் தரமான செடிகளை சுலபமாக தெரிவு செய்யலாம்.
  • ௧௦ (10) நாட்கள் கழித்து கப்பிலுள்ள செடிகளை பெரிய தொட்டிக்கு மாற்றலாம். இவை விதை மாதிரி (Seed Sampling) எனப்படும் .

( நல் குறிப்பு: பிளாஸ்டிக் கப்புக்கு பதிலாக காகித கப்பையே பயன்படுத்தினால் செடி வளர்த்த பின்னர் செடியுடன் காகித கப்பையும் சேர்த்து தொட்டிக்கு மாற்றலாம். இதுவே பிளாஸ்டிக் கப்பில் செடி வளர்த்தல், அதில் இருந்து மண்ணுடன் செடியை எடுக்கும் போது செடியின் வேர்கள் சேதமாக வாய்ப்புள்ளது )

  • புதிதாக ரோஸ் செடியை வாங்குவதற்கு பதிலாக , ஒரு ரோஸ் செடியின் கிளையை வெட்டி, அதை சிவப்பு மண்ணுடன் நட்டு மூடி வைத்தால் நன்றாக செடி வளரும்.

மண் கலவையின் பொருள்கள் என்னவென்று பார்ப்போம்:

  • சிவப்பு மண் ௫௦ (50)%,

தேங்காய் நார் உரம் ௫௦ (50)% அளவில் கலக்கவும். நகரத்தில் தேங்காய் நார்கள் கிடைப்பதில்லை. அதனால் , பெரும்பாலானோர் தேங்காய் நார் பிளாக்காக (கோகோபீட்) சந்தையில் அல்லது தோட்ட நர்சரியில் வாங்குகிறார்கள். இப்படி வாங்கினால், அந்த தேங்காய் நார் பிளாக்கை ௩(3) நாட்கள் ஊறவைத்தால், அதிக அளவில் தேங்காய் நார் உரம் கிடைக்கும்.

  • இந்த கலவையில் தேங்காய் நார் உரத்தை சமமாக

சேர்ப்பதால், தொட்டியின் மொத்த எடை குறையும். இதனால், மாடித்தோட்டத்தினால் ஏற்படும் அதிக எடையினால் கட்டிடம் சேதத்தில் இருந்து தவிர்க்கலாம்.

  • மேலும், இந்த உரம் தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைக்க

வல்லமை கொண்டது. இதனால்,கோடை காலத்தில் தண்ணீரின்றி செடிகள் வாடாமால் செழிப்பாக இருக்கும்.

  • பூச்சிக்கொல்லிகளுக்கு

மாட்டுச்சாணம்,

ஆட்டுப்புளுக்கை,

பாத்திரம் கழுவப்பட்ட நீர் (சோப்பு சேர்க்காதது),

வெங்காயம் மற்றும் பூண்டு தோல்,

சமையலறைக்கழிவு (சமைக்கப்படாதவை ),

வேப்பம் புண்ணாக்கு. இவை எல்லாம் கொண்டு மண்ணில் கலக்கலாம். எனவே மண், தேங்காய் நார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நன்றாக கலந்து செடிகளுக்கு பயன் படுத்தவும்.

செடி வளர்ப்பதற்கு தொட்டியின் அளவை எப்படி தேர்வு செய்வது?

  • செடிகளை தொட்டியில் அல்லது குரோவ்(grow) பேக் யில்

நடுவதற்கு முன்பாக, தெரிந்து வைக்க வேண்டிய ஒரு முக்கியமானவை என்னவென்றால்

“நடப்போகிற செடி பெரிய மரமாக வளர வல்லமை கொண்டதா இல்லை சின்ன செடியாக வளர வல்லமை

கொண்டதா” என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சின்ன செடியாக வளர வல்லமை கொண்டதை சின்ன தொட்டியில் அல்லது சின்ன குரோவ் பேக்யில் வளர்க்க வேண்டியது கட்டாயமாகும் (எதிரெதிர் மாறாக).

பராமரிப்புகள்:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும்.
  • தண்ணீர் ஊற்றும் பொழுது ஏற்படும் ரெண்டு தவறுகள் என்னவென்றால் அதிகப்படியான தண்ணீர் அல்லது தேவைக்கு குறைவாக தண்ணீரை ஊற்றுவது. இதை நன்றாக கவனித்து தண்ணீரை ஊற்றவும்.
  • தொடர்ச்சியான கண்காணிப்பு கண்டிப்பாக வேண்டும். இது ஒன்று மட்டும் இருந்தாலே, செடிகள் நல்ல செழிப்பாக வளர உதவும்.
  • அனைத்து செடிகளும் ஒரே ஒரு மாதத்தில் வளர்ந்து விடும். ஆனால், செடிகள் ஒரு மாதம் பின்பும் வளரவில்லை என்றால், செடியை புதிய மண் கலவைக்கு மாற்ற வேண்டியது கட்டாயம்.
  • சில செடிகளின் வேர்கள் பரவமுடியாமல் இருந்தால் , உடனே பெரிய தொட்டியில் புதிய மண்ணுடன் மாற்றவும். உதாரணத்துக்கு மாதுளைச்செடி மரமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால், அதை ஒரு சின்ன தொட்டியில் வளர்த்தல், வேர்கள் பரவமுடியாமல் செத்து விடும் .அதனால் , பெரிய தொட்டிற்கு மாற்றவும்.
  • மண் கலவையின் விகிதம் சரியாக இல்லாவிட்டாலும் , அது செடிகளை பாதிக்கும்
  • ஒவ்வொரு செடிகளுக்கும் ஒரு பருவம் உள்ளது. பருவத்திற்கு ஏற்றவாறு செடிகளை வளர்க்க வேண்டும். இல்லையெனில் , செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வளராமல் இறந்து விடும்.

பயன்படாத பொருளை வைத்து உட்புறத்தோட்டம் எளிதாக உருவாக்கலாம்:

  • பயனில்லாத அல்லது உடைந்த சிரட்டை (Coconut Shell) மற்றும் பானை கொண்டு சிறிய துளை செய்து மண்ணுடன் செடியை நடவும்.
  • பயனில்லாத கண்ணாடி பாட்டில், நெகிழி (Plastic) பாட்டில் மற்றும் பியூஸ் இழந்த பல்பு (fuse bulb) கொண்டு தண்ணீரை சேர்த்து செடிகளை வளர்க்கலாம். ஆனால் , தண்ணீரை ௪(4)க்கு நாட்களுக்கு மாற்றவும்.

Blogger: Harini

Watch the session directly on “YouTube”. You can also visit our other 200+ Lets talk lets connect session playlists here.

To Host/Participate a session, Register @ bit.ly/LTLC-Registration

To find all other upcoming sessions, here @ bit.ly/open-sessions

#Amazing Human Being #Let’s Talk Let’s Connect #Lush Landscaping #Vanitha Subramanian #Harini

Thanks for following us in other social medias, Whatsapp|Facebook|Instagram|YouTube|LinkedIn

--

--